திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக திருவிழா


திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவின் நான்காம் நாளான நேற்று வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை.

மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வைகாசி விசாகத் திரு விழாவின் நான்காம் நாளான நேற்று வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளினார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 13-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அதனையொட்டி கோயில் வளாகத்திலுள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி, தெய் வானைக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. விழா நாட்களில் தினமும் வசந்த மண்டபத்தில் சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்து தீபாரா தனைக்குப் பின்பு கோயிலை சென்றடைகிறார்.

விழாவின் நான்காம் நாளான நேற்று வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளி னார். மே 22-ம் தேதி வைகாசி விசாகத்தையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். சண்முகர் காலை 5.30 மணிக்கு மேல் கம்பத்தடி மண்டபத்தை வலம் வந்து, அந்த மண்டபத்திலுள்ள விசாகக்குறடில் எழுந்தருளிய பின்பு பாலபிஷேகம் நடைபெறும்.

மே 23-ம் தேதி காலை 7 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி தியாகராசர் கல்லூரி சாலை வழியாக மொட்டை யரசு திடலை அடைந்து பல் வேறு மண்டகப்படிகளில் எழுந்தருள்வார். அன்று இரவு பூப் பல்லக்கில் சுவாமி வலம் வருவார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ், அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா, அறங்காவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வரு கின்றனர்.

x