சதுரகிரி செல்ல மே 20 முதல் 5 நாட்கள் அனுமதி


பிரதிநிதித்துவப் படம்

வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி மே 20 முதல் 24-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. மலைப்பாதையில் உள்ள நீரோ டைகளில் இறங்கி குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மழை பெய்தாலோ ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தாலோ அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை யினர் தெரிவித்துள்ளனர். கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.