சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் திருக்கல்யாணம்


சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனார் கோயிலில் நிகழ்ந்த திருக்கல்யாணத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பூரணை, புஷ்கலையுடன் சுவாமி.

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி திருவிழா மே 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று திருக்கல்யாண வைபவத்தையொட்டி திருக்கல்யாண மண்டபத்தில் பூரணை, புஷ்கலையுடன் சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது.

இன்று இரவு கழுவன் திருவிழா, மே 20-ம் தேதி தேரோட்டம் நடைபெறும். மே 21-ம் தேதி நள்ளிரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் ஜெய்கணேசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.