தியேட்டர், ஓடிடியில் புதுவரவு என்னென்ன? - ஒரு ரவுண்டப்


இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடியில் என்னென்ன படங்கள் வந்துள்ளன என்பது குறித்து பார்ப்போம். தமிழ் படங்கள்: சந்தானம் நடித்துள்ள ‘இங்க நான் தான் கிங்கு’, விஜய்குமாரின் ‘எலக்சன்’, யாஷிகா ஆனந்தின், ‘படிக்காத பக்கங்கள்’ மற்றும் ‘கன்னி’ ஆகிய தமிழ்படங்கள் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளன.

மலையாள படங்கள்: பிருத்விராஜின் ‘குருவாயூர்அம்பலநடையில்’, ரதீஷ்பாலகிருஷ்ணனின் ‘சுரேஷின்டேயும் சுமலதாயுதேயும் ஹிருதயஹரியா ப்ரணயகதா’ (Sureshinteyum Sumalathayudeyum Hridayahariyaya Pranayakatha) மலையாள படங்கள் திரையரங்குகளில் திரையிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஹாலிவுட்: மரிசா அபேலாவின் ‘பேக் டு ப்ளாக்’ ஹாலிவுட் படம் வெளியிடப்பட்டுள்ளது.

ஓடிடி ரிலீஸ்: ‘Thelma the Unicorn’ ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தற்போது காணக்கிடைக்கிறது. கலையரசனின் ‘ஹாட் ஸ்பாட்’, சந்தோஷ் ஜெயக்குமாரின் ‘தி பாய்ஸ்’ ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது.

வெப்சீரிஸ்: வசந்தபாலனின் ‘தலைமை செயலகம்’ வெப்சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.