‘சூர்யா 44’  படத்துக்கு இசை அமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்


சென்னை: ‘சூர்யா 44’ படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்து விட்டார் சூர்யா. அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கும் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ‘புறநானூறு படத்துக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது’ என படக்குழு தெரிவித்திருந்தது.

அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு தலைப்பிடப்படவில்லை. சூர்யாவின் 44-வது படமான இதன் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது.

இதில் நடிக்க உள்ள நடிகர்கள், பிற தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டவர்களின் விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.