பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசும் ஹிப்ஹாப் ஆதியின் ‘PT சார்’ ட்ரெய்லர்


சென்னை: ஹிப்ஹாப் ஆதி நாயகனாக நடித்துள்ள ‘PT சார்’ படத்தின் ட்ரெய்லர் பள்ளியில் நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி பேசுகிறது. இந்த ட்ரெய்லர் காட்சிகள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன.

கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ‘PT சார்' எனத் தலைப்பு வைத்துள்ளனர். கஷ்மிரா பர்தேசி நாயகியாக நடித்துள்ளார்.

அனிகா சுரேந்திரன், பிரபு, முனீஷ்காந்த், பாண்டியராஜன், இளவரசு, தியாகராஜன் உட்பட பலர் நடித்துள்ளனர். இம்மாத இறுதியில் வெளியாகும் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - பி.டி. சாராக இருக்கிறார் ஆதி. அவருக்கு ஆசிரியை ஒருவரைக் கண்டதும் காதல். இப்படி ஜாலியாக கடக்கும் ட்ரெய்லரில் பள்ளியில் நிகழும் பாலியல் வன்கொடுமையும் காட்டப்படுகிறது. வழக்கு, நீதிமன்றம் என காட்சிகள் மாற, ஆதி பணியில் இருந்து நீக்கப்படுகிறார். ட்ரெய்லரே படத்தின் கதையைச் சொல்கிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியின் நீதிக்கான போராட்டத்தை படம் பேசும் எனத் தெரிகிறது.

ட்ரெய்லர் வீடியோ லிங்க்: