தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 அதிகரிப்பு


சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 அதிகரித்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.6,720-க்கும், பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.53,760-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.57,520-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.97.50-க்குவிற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.97,500 ஆக உள்ளது.

x