திருவள்ளூர் (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தொடர்ந்து முன்னிலை


திருவள்ளூர்: திருவள்ளூர் (தனி) தொகுதியின் வாக்கு எண்ணிக்கையின் 2-வது சுற்றின்படி 39, 026 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் முன்னிலை வகிக்கித்து வருகிறார்.

திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டுவில் உள்ள அந்தத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் பதிவான 14,23,885 வாக்குகளில் 2-வது சுற்றின் படி, காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 39,026 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரம்
சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்) 58,560
கு.நல்லதம்பி (தேமுதிக) 19,534
பொன்.வி. பாலகணபதி (பாஜக) 16,689
எம்.ஜெகதீஷ்சந்தர் (நாம் தமிழர்) 8,400