தென்காசியில் திமுக முன்னிலை; நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்ட பாஜக


ஜான் பாண்டியன் | கோப்புப் படம்

தென்காசி: தென்காசி தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலை பெற்றுள்ளார்.

தென்காசி தொகுதியில் இந்த மக்களவைத் தேர்தலில் 4,94,574 ஆண்கள், 5,37,327 பெண்கள், 67 மூன்றாம்பாலினத்தவர்கள் என மொத்தம் 10,32,976 பேர் வாக்களித்தனர். இது 67.72 சதவீத வாக்குப்பதிவாகும். இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்றில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலை பெற்றார்.

டாக்டர் ராணி ஸ்ரீகுமார் 6,487 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 4,971 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் 2,869 வாக்குகளும், பாஜக கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியன் 1,699 வாக்குகளும் பெற்றனர். பாஜக வேட்பாளர் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.