குடிநீர் தட்டு்ப்பாடு: காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் கிராம மக்கள் மறியல்


காஞ்சிபுரம் - வந்தவாசி செல்லும் சாலையில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து அப்புல்லாபுரம் கிராம பொதுமக்கள் சாலை மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - வந்தவாசி செல்லும் சாலையில் அப்துல்லாபுரம் கிராம பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணமலை மாவட்டம், அப்பதுல்லாபுரம் ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கண்ட ஊராட்சியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் முறையாக இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும். அதனால், சுமார் 7 கி.மீ., தொலைவுக்கு சென்று அருகில் உள்ள கிராமங்களில் குடிநீர் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், குடிநீர் தட்டுப்பாட்டை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்துல்லாபுரம் கிராம பொதுமக்கள் காஞ்சிபுரம் - வந்தவாசி செல்லும் சாலையில் காலி குடங்களை வைத்து, இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், காஞ்சிபுரத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அப்பகுதியை கடக்க முடியாமல் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த காஞ்சிபுரம் தாலுகா காவல் உதவி ஆய்வாள் கிஷோர் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தல் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும், குடிநீர் தட்டுப்பாட்டை சீரமைப்பது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, மறியல் போராட்டத்தை கை விட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், அச்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

x