வைகோவிடம் முதல்வர் நலம் விசாரிப்பு


சென்னை: கடந்த 25-ம் தேதி நெல்லையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கால் இடறி விழுந்ததில் இடது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னைஅப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த29-ம் தேதி அறுவை சிகிச்சைமேற்கொள்ளப்பட்டு, பிளேட் பொருத்தப்பட்டது.

இதற்கிடையே, அவரது உடல்நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விசாரித்தனர்.இந்நிலையில் நேற்று அப்போலோ மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகைதந்தார். அப்போது அவர் வைகோவை சந்தித்து நலம்விசாரித்தார். சுமார் 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.