தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 உயர்வு


சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.54,200-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.6,775-க்கும், பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.54,200-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.57,960-ஆக இருந்தது.

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.102.20-க்குவிற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1,02,200-ஆக இருந்தது

x