ராமேசுவரம் புனித செங்கோல் மாதா ஆலயத்தில் தேரோட்டம்


ராமேசுவரம்: ராமேசுவரம் சுடுகாட்டன்பட்டியில் உள்ள புனித செங்கோல் மாதா ஆலயத்தில் தேரோட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம் சுடுகாட்டான்பட்டியில் உள்ள புனித செங்கோல் மாதா ஆலயத்தின் 458வது ஆண்டு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள் தோறும் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இந்நிலையில் சனிக்கிழமை விழாவின் முக்கிய நிகழ்வான புனித செங்கோல் மாதா ஆலய தேரோட்டம் நடைபெற்றது. தேர் சுடுகாட்டான்பட்டி கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. மேலும் உலக நன்மைக்காக ஊர்வலத்தில் பக்தர்கள் ஜெபமாலை ஜெபித்தனர். இதனையடுத்து தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பொது ஜெபம், கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மட்டியரேந்தல் புனித மரியன்னை, சூசைப்பர், மிக்கேல் அதிதூதர் ர் தேவாலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித மரியன்னை, சூசைப்பர், மிக்கேல் அதிதூதர் உருவம் ஊர்வலம் நடைபெற்றது.