திடீரென அடைக்கப்பட்ட அழகர்கோவில் மலைப்பாதை - 4 கி.மீ. மலைப் பாதையில் நடந்து சென்ற பக்தர்கள்


அழகர்கோவிலில் நேற்று மலைக்கு செல்லும் பாதை இரும்புக் கதவுகளால் அடைக்கப்பட்டிருந்தது. (உள்படம்) கள்ளழகர் கோயில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை.

மதுரை: அழகர்கோவில் மலைக்கு செல்லும் பாதை கோயில் நிர்வாகத்தால் திடீரென அடைக்கப்பட்டதால் வாகனங்களில் வந்த பக்தர்கள் மலைக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

அழகர்கோவிலில் மலையடிவாரத்தில் கள்ளழகர் கோயில், 18-ம் படி கருப்பணசாமி கோயில், மலை மீது சோலை மலை முருகன் கோயில், நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக் கணக்கானோர் தரிசனத்துக்காக வருகின்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் அடிவாரத் திலிருந்து மலைக்கு கட்டணப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வாகனங்கள் மூலம் பக்தர்கள் மலைக்கு செல்கின்றனர். தற்போது மலைக்குச் செல்லும் பாதைகள், தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் மதுரை மாவட் டத்தில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் அழகர்கோவில் மலைப்பாதைகள் ஆங்காங்கே சேதமடைந்து தடைகள் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் கோயில் நிர்வாகம் சார்பில் நேற்று காலையில் ‘மலைப் பாதையில் பால வேலை நடைபெறுவதால் மலைக்குச் செல்ல முடியாது’ எனத் தடை விதிக்கப்பட்டு, அறிவிப்பு பலகை வைத்தனர். இதனால் வெளியூர்களிலிருந்து வாகனங்களில் வந்தவர்கள் ஏமாற் றத்துடன் திரும்பினர். சில பக்தர்கள் அடிவாரத்தி லிருந்து 4 கி.மீ. தூரம் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

x