சுந்தர மகா காளியம்மன் கோயிலில் படுகள காட்சி!


பிரதிநிதித்துவப் படம்

கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில் உள்ள சுந்தர மகா காளியம்மன் கோயிலின் 133-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா மே 9-ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது.

விழாவின் பிரதான நிகழ்வாக நேற்று பச்சைக்காளி, பவளக்காளி புறப்பாடு, படுகள காட்சி, பிறந்த வீட்டார் அழைப்பு, நகர்வலக் காட்சி ஆகியவை நடைபெற்றன. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தங்களை குழந்தைகளாக பாவித்து, பச்சைக்காளியின் அருள் பெற வேண்டும் என்பதற்காக தரையில் அமர்ந்திருந்தனர். அப்போது, பச்சைக்காளி வேடமிட்ட ஆண் ஒருவர் வந்து, அவர்கள் மீது மஞ்சள் நீரைத் தெளித்தார்.

பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இன்று (மே 20) காவிரி ஆறு படித்துறையில் இருந்து சக்தி கரகம், அக்னி கொப்பரையுடன், பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா, நாளை (மே 21) விடையாற்றி, 23-ம் தேதி சுத்தாபிஷேகம் நடைபெறுகிறது.

x