சென்னை அக்கரை இஸ்கான் கோயிலில் 22-ல் நரசிம்ம சதுர்த்தசி


சென்னை: தனது பக்தன் பிரகலாதனை, அவனது தந்தை ஹிரண்யகசிபுவின் கொடுமையில் இருந்து பாதுகாக்க வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தசியில் நரசிம்மராக மகாவிஷ்ணு அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

இதுவே நரசிம்ம ஜெயந்தி அல்லது நரசிம்ம சதுர்த்தசி எனப்படுகிறது.சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை பகுதியில் ‘இஸ்கான்’ (அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) அமைப்பின் கிருஷ்ணர் கோயில் உள்ளது.

இங்கு வரும் 22-ம் தேதி நரசிம்ம சதுர்த்தசி விழா கொண்டாடப்பட உள்ளது.அன்று மாலை 4 மணிக்கு கீர்த்தனைகள், 5 மணிக்கு நரசிம்மர்அபிஷேகம், 6 மணிக்கு நரசிம்மரின்தெய்வீக லீலைகள் குறித்த சொற்பொழிவு ஆகியவை நடைபெறும்.

தொடர்ந்து, மகா ஆரத்தி முடிந்த பிறகு, 7 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் என்று சென்னை இஸ்கான் கோயில் நிர்வாக குழு தெரிவித்துள்ளது.