சீலைக்காரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்


காரியாபட்டி கரியனேந்தலில் நடைபெற்ற சீலைக்காரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்.

விருதுநகர்: காரியாபட்டி அருகே சீலைக்காரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியா பட்டி கரியனேந்தலில் பேத்தியாள் சீலைக்காரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, கடந்த 17-ம் தேதி விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை, ஜெப பாராயணம், தீபாராதனையுடன் தொடங்கியது.

நேற்று காலை 10.30 மணியளவில் சங்கரேஸ்வர சுவாமிகள் தலைமையில் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.