“உங்கள் ஒரு வாக்கு ஜனநாயகம், அரசியலமைப்பை பாதுகாக்கும்” - பிரியங்கா காந்தி


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 5-ம் கட்டமாக 49 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “உங்களுடைய ஒரு வாக்கு மூலம், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்க முடியும்.

ஒவ்வொருவரும் ரூ.25 லட்சம் வரையில் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். ஆண்டுக்கு ரூ. 1லட்சம் மதிப்பிலான பழகுநர் பயிற்சி பெற்றுக் கொள்ள முடியும். எஸ்.சி.,எஸ்.டி.,மற்றும் ஓபிசி பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்.

உங்களின் ஒரு வாக்கு இந்தியாவின் ஜனநாயகம், அரசியலமைப்பை பாதுகாக்கும். உங்களின் ஒரு வாக்கு நாட்டை பணவீக்கத்திலிருந்து விடுவிக்கும். வேலையின்மை மற்றும் பொருளாதார நெரு்ககடிக்கு தீர்வு கிடைக்கும். எனவே, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என்றார்.