“காங்கிரஸ் அரசை தொழிலதிபர்கள் விரும்புவதில்லை” - பிரதமர் மோடி


மேற்கு வங்கம் பிஷ்ணுபூர் மற்றும் புருலியாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் இதுகுறித்து பிரதமர் கூறியதாவது: இளவரசர் ராகுல் காந்தி தொழிலதிபர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்.

எனவே, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களில் முதலீடு செய்ய மாட்டோம் என்று தொழிலதிபர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர். இதனால், அந்த மாநிலங்களில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எப்படி கிடைக்கும்?

திரிணமூல், இடது சாரிகள் மற்றும் காங்கிரஸ் ஆகியவை மூன்று வெவ்வேறு அரசியல் கட்சிகளாக இருந்தாலும் அவை செய்யும் பாவங்கள் ஒரே மாதிரியானவைதான். இந்த கட்சிகள் மேற்கு வங்கத்தை ஏழை மாநிலமாக மாற்றி வைத்துள்ளன. ஏழைகள், தொழிலாளர்கள், எஸ்சி-எஸ்டி என முழங்குவார்கள்.

ஆனால், ஒன்றும் செய்ய மாட்டார்கள். இதற்கு, மேற்கு வங்கமே நல்ல உதாரணம். இவ்வாறு பிரதமர் பேசினார். மேற்கு வங்க மாநிலம் 42 மக்களவை தொகுதிகளை கொண்டுள்ளது. 2019-ல் நடைபெற்ற தேர்தலில் பாஜக 18, திரிணமூல் 22 , காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றன.

x