தொலைதூர படிப்பு அங்கீகாரம் விண்ணப்பிக்க ஜூன் 15 வரை அவகாசம்


சென்னை: பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு: நடப்பு கல்வியாண்டில் (2024-25) செப்டம்பர் பருவத்தின் சேர்க்கைக்கான தொலைதூர, இணையவழி படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான அவகாசம் மே 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பப்பதிவுக்கு ஜூன் 15-ம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தகுதியான கல்வி நிறுவனங்கள் /deb.ugc.ac.in/ எனும் வலைதளம் வழியாக ஜூன் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

x