குளித்தலை அருகே பதுக்கிய வைத்திருந்த 1.05 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: பதுக்கிய நபர் கைது


கரூர்: குளித்தலையில ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது செய்யப்பட்டார். 1.05 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவலர்கள் துரைசாமி, ரமேஷ்குமார், கவுதமன் ஆகியோர் குளித்தலை தெப்ப குள தெருவில் உழவர் சந்தை அருகே இன்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு மறைவான இடத்தில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 21 வெள்ளை நிற பாலித்தீன் சாக்கு மூட்டைகளில் 1.05 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இது குறித்து விசாரணை நடத்தியதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நாசர் ரேஷன் அரிசியை அங்கு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாசரை கைது செய்த போலீஸார் 1.05 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.