பெட்ரோல் குண்டு வீச்சு: 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக, இரு பிரிவினர் இடையே கடந்த ஏப்ரல் 23-ம் தேதி ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக ஒரே நாளில் 8 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இரு பிரிவினர் மோதல் மற்றும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த சண்முகராஜ் (எ) கட்டத்துரை (26), கயத்தாறு பிரியங்கா நகரைச் சேர்ந்த ராஜா (எ) சண்முக ராஜா (22), கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த சுடலைமுத்து (எ) சண்டியர் சுடலை (23), கயத்தாறு மருத்துவமனைச் சாலை பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (எ) சஞ்சய் (23), நரசிம்மன் (21), கடம்பூர் ஓனமாக்குளம் பகுதியைச் சேர்ந்த கணேஷ்குமார் (22), கடம்பூர் குப்பண்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகபாண்டி (23), அருண்குமார் (எ) அப்பு (22) ஆகிய 8 பேரை கைது செய்தனர். இந்நிலையில், இவர்கள் 8 பேரும் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.