அமெரிக்க சாலை விபத்தில் 3 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு


வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் படித்துவந்த ஸ்ரீயா அவசரளா, ஆரியன் ஜோஷி, அன்வி சர்மா, ரித்வக் சோமபள்ளி, முகமது லியாகத் ஆகிய ஐந்து அமெரிக்க வாழ் இந்திய மாணவர்கள் காரில் கடந்த வாரம் சென்றனர். அல்ஃபரெட்டா என்ற பகுதியில் கார் அதிவேகமாக சென்றபோது திடீரென ஓட்டுநர் (ரித்வக் சோமபள்ளி) கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் கார் மரத்தில் மோதியதில் ஸ்ரீயா அவசரளா, ஆரியன் ஜோஷி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

படுகாயமடைந்த மூவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் அன்வி சர்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.