சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் கோவிந்தர் வீதியுலா @ திருப்பதி


திருப்பதி: திருப்பதி கோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவத்தில் நேற்று சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் கோவிந்தர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி நகரில் மையப் பகுதியில் பிரசித்திபெற்ற கோவிந்தராஜர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது.

இவ்விழாவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ பெருமாள் காலை, இரவு என இரு வேளைகளிலும் வெவ்வேறு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

விழாவின் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் மாட வீதிகளில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அதிகாரிகள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.