பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய ஊமை கிளாத்தி மீன்!


ராமேசுவரம்: மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்து திரும்பிய விசைப் படகு மீனவர் வலையில் ஊமை கிளாத்தி மீன் சிக்கியது.

மன்னார் வளைகுடா பகுதியில் பவளப்பாறைகளில் வாழும் மீன் இனம் ஊமை கிளாத்தி. இவை சிறிய நண்டு மற்றும் கடற் புழுக்களை விரும்பி உண்ணும். இந்த ஊமை கிளாத்தி மீனின் தோல் கடினமாக இருக்கும். இந்த கடினமான தோலை நீக்கிவிட்டு, சதையை மட்டும் மீன் பிரியர்கள் விரும்பி உண்ணுகின்றனர்.

கடலில் வாழும் மற்ற கிளாத்தி மீன்கள் பற்களை அசைத்து ஓசை எழுப்பும். ஆனால், இந்த கிளாத்தி மீன்கள் ஓசை எழுப்பாது என்பதால், இதை ஊமை கிளாத்தி என்று மீனவர்கள் அழைக்கின்றனர்.

x