16,786... காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் நோட்டா வாக்குகள் அதிகரிப்பு!


மதுராந்தகம்: காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளில் நோட்டோவுக்கு மட்டும் 16,786 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், நோட்டோவை விட நான்கு வேட்பாளர்கள் குறைந்தளவில் வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியில் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய சட்டபேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் திமுக வேட்பாளர் செல்வம் 5,86,044 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராஜசேகர் 3,64,571 வாக்குகள் பெற்று இரண்டாம் பிடித்தார்.

இந்நிலையில், காஞ்சி தொகுதியில் செங்கல்பட்டு பேரவைத் தொகுதியில் 4,562 வாக்குகளும், திருப்போரூரில் 2,737 வாக்குகளும், செய்யூரில் 1,300 வாக்குகளும், மதுராந்தகத்தில் 1,476 வாக்குகளும், உத்திரமேரூரில் 2,290 வாக்குகளும், காஞ்சிபுரத்தில் 4,421 வாக்குகளும் நோட்டாவுக்கு விழுந்துள்ளன. அந்த வகையில் காஞ்சி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 16 ஆயிரத்து 786 வாக்குகள் நோட்டாவுக்குக் கிடைத்துள்ளன.

இதில் விநோதம் என்னவென்றால் நோட்டோவை விட நான்கு வேட்பாளர்கள் குறைவான வாக்குகளை பெற்று நோட்டாவிடம் தோற்றுள்ளனர். காஞ்சி மக்களவைத் தொகுதியில் நோட்டோவுக்கு வாக்களிப்பது தொடர்ந்து அதிகரித்து வருவதால், நோட்டாவுக்கு அதிகளவில் வாக்குகள் விழாத வகையில் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என கடந்த மக்களவைத் தேர்தலின்போதே அரசியல் கட்சி தலைவர்கள் கூறினர். ஆனால், அப்படி இருந்தும் இந்தத் தேர்தலிலும் நோட்டாவின் செல்வாக்கை யாராலும் தடுக்க முடியவில்லை.

x