காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் பணி தொடக்கம்: திமுக முன்னிலை


பிரதிநிதித்துவப் படம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பெரும்பாலான வாக்குகள் திமுக கூட்டணிக்கே பதிவாகியுள்ளன.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் பிரித்து கட்டப்பட்டு எண்ணப்பட்டன. இதில் பெரும்பாலான வாக்குகள் திமுக கூட்டணிக்கே விழுந்துள்ளன. ஒவ்வொரு கட்சிகளுக்கும் விழுந்த வாக்குகள் அடிப்படையில் தபால் வாக்குகள் 25 வாக்குகள் கொண்ட கட்டுகளாக கட்டப்படுகின்றன. ஒவ்வொரு வேட்பாளருக்கும் விழுந்த வாக்குகள் அடிப்படையில் கட்டுகள் கட்டப்படுகின்றன.

இதில் பெரும்பாலான வாக்குகள் திமுக கூட்டணிக்கே விழுந்துள்ளன. திமுக கூட்டணிக்கு 250-க்கும் மேற்பட்ட வாக்குகள் விழுந்த நிலையில் அதிமுக, பாமகவுக்கு 50-க்கும் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் பலர் திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.

தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தற்போது வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெருகின்றன. முன்னதாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு வரப்பட்டு அதன் சீல்கள் பிரிக்கப்பட்டன.

x