முருகன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சங்கல்ப பூஜை


சேலம்: சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம் பாளையத்தில் உலகிலேயே மிகவும் உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலையுடன் கூடிய, முத்துமலை முருகன் கோயில் உள்ளது.

இங்கு, நேற்று காலை வந்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முருகன் சிலையின் திருவடியில் மலர்தூவி வணங்கியதுடன், முருகன் வேல் தாங்கி, மூலவரை சுற்றி வந்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

பின்னர், முருகன் சிலையின் உச்சிக்குச் சென்ற பழனிசாமி, அங்கு சங்கல்ப பூஜை செய்து, முருகனின் வேலுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதைத் தொடர்ந்து, முருகன் சிலையின் வயிற்றுப் பகுதியில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் மேற்கொண்டார்.

வழிபாடு முடிந்த பின்னர், கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, அதிமுக சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், எம்எல்ஏ.-க்கள் ஜெயசங்கரன், நல்லதம்பி உள் ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

சமீபத்தில், பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்து, கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் 3 நாட்கள் தியானம் மேற்கொண்டார். இது அரசியல்அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி யது. அதேபோல், மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் வழிபாடும், தியானமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.