தங்கம் விலை பவுனுக்கு ரூ.352 குறைந்தது


சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.352குறைந்து ரூ.53,328-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.44 குறைந்து ரூ.6,666-க்கும், பவுனுக்கு ரூ.352 குறைந்து ரூ.53,328க்கும் விற்பனையானது.

இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை சவரன் ரூ.57,088க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.97.30-க்கு விற்பனையாகிறது.