திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.

திண்டுக்கல்: வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து திண்டுக்கல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சித்துவார்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் விஜயகுமார். இவர் மீது அப்பகுதியை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸாரை கண்டித்து ஒருநாள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, வழக்கறிஞர்கள் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள், விஜயகுமாரை தாக்கிய அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி கோஷங்கள் எழுப்பினர்.