ஒலிம்பிக் போட்டிக்கு நிஷாந்த் தேவ் தகுதி


பாங்காக்: இந்திய குத்துச்சண்டை வீரரான நிஷாந்த் தேவ் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கான தகுதி சுற்று தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரில் நடைபெற்று ருகிறது. இதில் ஆடவருக்கான 71 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிஷாந்த் தேவ் கால் இறுதி சுற்றில் மால்டோவாவின் வாசில் செபோடரியை எதிர்த்து விளையாடினார். இதில் நிஷாந்த் தேவ் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் நிஷாத் தேவ். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள முதல் இந்திய வீரர் நிஷாந்த் தேவ் ஆவார்.