சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன்: அரை இறுதியில் காயத்ரி, ட்ரீசா ஜோடி


சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி, போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள தென் கொரியாவின் கிம் சோ யோங், ஹாங் ஹீ யோங் ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ட்ரீசா, காயத்ரி ஜோடி 18-21, 21-19, 24-22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.