சாட்விக்-ஷிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி


சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் உலகின் முதல் நிலை ஜோடியான இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி தங்களது முதல் சுற்றில், தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் டேனியல் லண்ட்கார்ட், மேட்ஸ் வெஸ்டர்கார்ட் ஜோடியை எதிர்த்து விளையாடியது. 47 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக்-ஷிராக் ஜோடி 20-22, 18-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.