தேசிய கிக்பாக்ஸிங் போட்டியில் பதக்கம் வென்ற சிவகங்கை மாணவர்களுக்கு பாராட்டு


மனுஸ்ரீ, ருட்வின் பிரபு, ரூபன் சாய்சிவன்

சிவகங்கை: தேசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டியில் பதக்கம் வென்ற சிவகங்கை மாணவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் மே 21 முதல் மே 26-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 28 மாநிலங்களைச் சேர்ந்த 1,291 வீரர்கள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் 102 பேர் பங்கேற்றனர். இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழகம் வென்றது. அதேபோல் கேடட் பிரிவுகளிலும் 2-வது இடத்தை பெற்றது.

இதில் சிவகங்கையில் இருந்து பங்கேற்ற மனுஸ்ரீ தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களையும், ருட்வின் பிரபு வெள்ளி பதகத்தையும், ரூபன் சாய்சிவன் வெண்கல பதகத்தையும் வென்றனர். வென்ற மாணவர்களையும், பயிற்சியாளர் குண சீலனையும் கிக் பாக்ஸிங் சங்கத் தலைவர் சதிஷ், சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.