சென்னை | பணியாளர்களுக்கு கோயிலுக்கு அருகில் குடியிருப்பு: திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்


திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கம்

சென்னை: கோயில் பணியாளர்களுக்கு கோயில் அருகிலேயே குடியிருப்பு கட்டித் தர வேண்டும் என்று தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கத்தின் சென்னை கோட்டம் சார்பில் புதிய கிளை திட்டமிடுதல் குறித்து நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோயிலில் மூன்றாண்டுகள் பணிபுரிந்து வரும் தற்காலிக தொகுப்பு ஊதிய மற்றும் அன்னதானப் பணியாளர்களை பணி நிரந்தர செய்ய வேண்டும். கோயில் பணியாளர்களுக்கு கோயில் அருகிலேயே பணியாளர் குடியிருப்பு கட்டித் தர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது போல் கோயில் பணியாளர்களுக்கும் 40 சதவீத சம்பள ஒதுக்கீட்டை பொது நிதியாக ஏற்படுத்த வேண்டும்.

கோயில் பணியாளர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்க வேண்டும். திருக்கோயில் பணியாளர்களில் கர்ப்பிணிகளுக்கு தனி இருக்கைகள் மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

x