தேனியில் ஆதரவற்றோருக்கு பிரியாணி வழங்கிய உணவகம் @ உலக பட்டினி தினம்


தேனி: உலகம் முழுவதும் பட்டினியால் வாடும் மில்லியன் கணக்கான மக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மே 28-ம் தேதி உலக பட்டினி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவதை பல்வேறு நாடுகள் கடைபிடித்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தேனி அனிபா பிரியாணி உணவகம் சார்பில் ஆதரவற்றோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இதற்காக உருவாக்கப்பட்டிருந்த பிரத்யேக இலவச உணவு வாகனம் தேனி மற்றும் சுற்றுப் புறங்களில் பயணித்து சாலையோரம் இருக்கும் ஆதரவற்றோர், மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் இருப்பவர்களுக்கு பிரியாணி வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் அனிபா பிரியாணி உணவகத்தின் உரிமையாளர் பாசித் ரஹ்மான் தலைமை வகிக்க, முன்னாள் எம்.பி-யான தங்க தமிழ்ச் செல்வன் முன்னிலை வகித்தார். சமூக சேவகர் கேபிஒய் பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வு குறித்து உணவக உரிமையாளர் பேசிய பாசித் ரஹ்மான், “பசி தீர்க்கும் வகையில் இன்று தேனியில் எங்கள் நிறுவனத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

x