கள்ளக்குறிச்சியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம்


கள்ளக்குறிச்சி: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு சங்கராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சுமார் 300-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதியிலும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாவட்ட செயலாளர் பரணி பாலாஜி வழிகாட்டுதலின்படி கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஒன்றிய தலைவர் பங்க் குமார் மற்றும் வழக்கறிஞர் ஜெய பிரகாஷ் தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகள் முதல் கட்டமாக சுமார் 300-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஒன்றிய நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் என திரளாகக் கலந்துக்கொண்டனர்.