மக்களவைத் தேர்தல் 2024: 6வது கட்டத்தில் 9 மணி வரை 10.82 சதவீதம் வாக்குப்பதிவு


புதுடெல்லி: மக்களவைத் தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப்பதிவு 58 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 10.82 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

உத்தர பிரதேசம்: 12.33%
ஹரியாணா: 8.31%
மேற்கு வங்கம் 16.64%
பிஹார்: 9.66%
டெல்லி: 8.94%
ஒடிசா: 7.43%
ஜார்க்கண்ட்: 11.74%
காஷ்மீர்: 8.89%

முக்கியப் பிரமுகர்கள் வாக்களிப்பு: தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் மகள் மிராயா மற்றும் மகன் ரைஹான் ராஜீவ் வத்ரா, கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான கவுதம் காம்பீர், டெல்லி பாஜக தலைவர் பன்சூரி ஸ்வராஜ்ம், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எனப் பலரும் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

வாக்களித்த பின்னர் பிரியங்காவின் மகள் மிராயா கூறுகையில், “சோம்பலாக இருந்துவிடாதீர்கள். வாக்களிக்க வாருங்கள். மாற்றத்துக்காக வாக்களியுங்கள்” என்றார். மிராயா முதன்முறை வாக்காளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரைஹான் ராஜீவ் வத்ரா கூறுகையில், “இது முக்கியமான தேர்தல். இந்தத் தேர்தலில் வாக்களித்து நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற வாக்களியுங்கள்” என்றார்.

இந்த மக்களைத் தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி இணைந்து களம் காண்கிறது. இதுவரை தனித்து போட்டியிட்ட ஆம் ஆத்மிக்கு இந்தத் தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.

x