சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சம்


கோப்புப்படம்

மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் நேற்று வர்த்தகம் மிகவும் விறுவிறுப்புடன் காணப்பட்டது. அதன் காரணமாக, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டிமுதன் முறையாக புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை தொட்டன.

வர்த்தக நேரத்தின்போது ஒருகட்டத்தில் சென்செக்ஸ் 23,000புள்ளிகளைத் தொட்டு முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. புதிய வெளிநாட்டு முதலீடுகள் வரத்து மற்றும் மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு சந்தையின் விறுவிறுப்புக்கு முக்கிய காரணங்களாக அறியப்பட்டன.

முன்னணி 30 நிறுவனங்களை உள்ளடக்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீட்டெண் வர்த்தகத்தின் முற்பகுதியில் ஒரு கட்டத்தில் 164.24 புள்ளிகள் உயர்ந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் 75,582.28 புள்ளிகளை எட்டியது. அதேபோன்று, தேசியபங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டியும் 36.4 புள்ளிகள் அதிகரித்து பங்குச் சந்தை வரலாற்றில் முதன்முறையாக 23,000 புள்ளிகள் என்ற மைல்கல்லை கடந்தது. இருப்பினும், சென்செக்ஸ், நிஃப்டி சிறிய சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.