கடந்த 10 ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி அபாரம்! - நடிகை ராஷ்மிகா நெகிழ்ச்சி


மகாராஷ்டிராவில் மும்பை மற்றும் நவி மும்பையை இணைக்க கடலில் 21.8 கி.மீ தூரத்துக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அடல் சேது என அழைக்கப்படும் இந்தப் பாலத்தை பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியதாவது: அடல் பாலம் மூலம் மும்பை, நவி மும்பை இடையேயான 2 மணி நேர பயணம் 20 நிமிடமாக சுருங்கியுள்ளது.

தற்போது நவி மும்பையிலிருந்து மும்பை வரையும், கோவாவிலிருந்து மும்பை வரையும், பெங்களூரிலிருந்து மும்பை வரையும் அனைத்து பயணங்களுமே, பிரம்மாண்டமான சாலை கட்டமைப்பு மூலம் எளிதாகிவிட்டது. இது பெருமைப்பட வேண்டிய விஷயம்.

இந்தியா எங்கேயும் நிற்கவில்லை. கடந்த 10 ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி அபாரம். நாட்டில் உள்ள கட்டமைப்பு, சாலை திட்டங்கள் மற்றும் இதர திட்டங்கள் எல்லாம் அருமையாக உள்ளது. இது நமக்கான நேரம் என நினைக்கிறேன். இளம் இந்தியா மிக வேகமாக வளர்கிறது. உண்மையிலேயே இந்தியாவின் வளர்ச்சி பிரம்மிக்க வைக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.