வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் ராகுல் அமோகம்


மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். வயநாடு தொகுதியில் அவர் 3 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் 5 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. அந்தப் பெயரை காப்பாற்றுவதற்காக இத் தொகுதியிலும் ராகுல் போட்டியிட்டார். இத்தொகுதியில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை சோனியா காந்தி எம்.பி.யாக இருந்தார்.