பொறியியல் சேர்க்கை: 1.73 லட்சம் விண்ணப்பம்


சென்னை: இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 6-ம் தேதி தொடங்கியது.

இதுவரை ஒரு லட்சத்து 73,792 மாணவ, மாணவிகள் (நேற்று மாலை 6 மணி நிலவரப்படி) பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு லட்சத்து 21,366 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும், 81,950 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 6-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் www.tneaonline.org எனும் இணையதளம் வாயிலாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்‌. இணைய வசதி இல்லாதவர்கள் சிறப்பு சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.