பிளஸ் 2 துணை தேர்வு ஜூன் 24-ல் தொடங்குகிறது: அரசு தேர்வுகள் இயக்குநர் தகவல்


சென்னை: பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கும் தேர்வில் பங்கேற்க தவறிய மாணவர்களுக்கும் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 துணை தேர்வு ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 1-ம் தேதி முடிவடைகிறது.

அதேபோல், பிளஸ் 1 துணைத் தேர்வு ஜூலை 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வுகள் தினமும் காலை 10 முதல் மதியம் 1.15 மணி வரைநடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா அறிவித்துள்ளார். துணை தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.