நீட் தேர்வு விடை குறிப்பு: தவறு இருந்தால் புகார் தரலாம்


சென்னை: இளநிலை நீட் தேர்வுக்கான விடைக் குறிப்புகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது. விடைக் குறிப்புகளில் ஏதேனும் தவறு இருந்தால், ரூ.200 பதிவு கட்டணம் செலுத்தி அதுகுறித்து புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இத்தேர்வுக்கான விடைக் குறிப்புகள் https://exams.nta.ac.in/NEET என்ற என்டிஏ இணையதள பக்கத்தில் கடந்த 29-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளன. இந்த விடைக் குறிப்புகள் மற்றும் கேள்விகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அதுதொடர்பாக மே 31-ம் தேதி (இன்று) இரவு 11.50 மணிக்குள் ரூ.200 பதிவு கட்டணம் செலுத்தி புகார் அளிக்கலாம். அதன்பிறகு, விடைக்குறிப்புகளில் எந்த மாறுதலும் செய்யப்படாது.

x