உடுமலையில் சிறுமிக்கு பாலியல் கொடுமை: தங்கும் விடுதிக்கு சீல்


திருப்பூர்: உடுமலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட புகாரில், தனியார் தங்கும் விடுதிக்கு ஆட்சியர் உத்தரவின் பேரில் `சீல்' வைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தளி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த ஜனவரி 19-ம் தேதி, 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் 9 பேரை கைது செய்தனர்.

தனியார் தங்கும் விடுதி மேலாளரும் கைது செய்யப்பட்டார். அந்த விடுதியில் இதுபோன்ற விதிமீறல்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாலும், விடுதியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாலும், தங்கும் விடுதிக்கு `சீல்' வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து, உடுமலைப்பேட்டை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையிலானஅதிகாரிகள், விடுதியை மூடி `சீல்' வைத்தனர்.