தங்கம் பவுனுக்கு ரூ.880 குறைந்தது


சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக். 4-ம் தேதி பவுன் ரூ.42,280என்றளவில் விற்பனையானது.

இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்துகடந்த டிச. 4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் மார்ச் 28-ம்தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறுகாணாத உயர்வை எட்டியது. அதன்பின்னர் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை காணப்படுகிறது. குறிப்பாக கடந்த 20-ம்தேதி ரூ.55,200 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்கள் பவுன் ரூ.54,880 என மாற்றமில்லாமல் இருந்த நிலையில், நேற்று பவுனுக்கு ரூ.880 குறைந்து ஒரு பவுன் ரூ.54,000 என்ற விலையில் விற்பனையானது. கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.6,750-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.57,760-க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.3.30 குறைந்து,ஒரு கிராம் ரூ.97-ஆகவும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.97,000-ஆகவும் இருந்தது.