மென்பொருள் ‘பாஸ்வேர்டு’ திருட்டு: மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் புகார்


தங்கள் நிறுவன மென்பொருள் பாஸ்வேர்டை பொறியாளர் ஒருவர் திருடி விட்டதாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தவர்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: மதுரை பழங்காநத்தம் நேரு நகர் பகுதியில் மோகன்ராஜ் - பிரகல்யா தம்பதி இ-கார் மற்றும் இ-பைக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் என்ற நிறுவனத்தை நடத்துகின்றனர்.

இந்நிறுவனத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவரும் இதில் பணியாற்றினார். அவர் மூலமே நிறுவனத்துக்குரிய மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அந்தப் பொறியாளர் வேலையை விட்டு சென்று விட்டார்.

இந்நிலையில், அவர் தயாரித்த மென்பொருள் மற்றும் அதற்கான ரகசிய குறியீடை (பாஸ்வேர்டு) திருடிச் சென்றாகவும், இதனால் நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், அத்தம்பதி மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்த காவல் ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

x