சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 7 பேர் மீது சாதி வன்கொடுமை வழக்கு


பிரதிநிதித்துவப் படம்

உடுமலை: உடுமலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 7 பேர் மீது சாதி வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த ஓராண்டாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 3 சிறுவர்கள் உட்பட 9 பேர், உடுமலை அனைத்து மகளிர் போலீஸாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டனர். கைதானவர்களில் ஜெய காளீஸ்வரன் (19), மதன் குமார் (19), பரணிக் குமார் (21), யுவ பிரகாஷ் (24), நந்த கோபால் (22), பவாபாரதி (22) மற்றும் ஒரு சிறுவன் உட்பட 7 பேர் மீது சாதி வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அனைத்து மகளிர் போலீஸார் தெரிவித்தனர்.

சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை சம்பவம் கடந்த ஓராண்டாகவே நிகழ்த்தப்பட்டு வந்தது, உடுமலை காவல் நிலையத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள தங்கும் விடுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.