சென்னை: மலேசியா புறப்பட இருந்த விமானத்தில் புகைப்பிடித்த இளைஞர் கைது


சென்னை: சென்னையில் இருந்து மலேசியாவுக்கு புறப்பட இருந்த விமானத்தில் புகைப்பிடித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் இருந்து மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 174 பயணிகளுடன் நேற்று இரவு 10.15 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் (30) என்ற பயணி தனது இருக்கையில் அமர்ந்தபடி புகை பிடித்துக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்ததும் விமான பணிப்பெண்கள், விமானத்துக்குள் புகை பிடிக்க அனுமதி கிடையாது. ஆனால் அந்தப் பயணி தொடர்ந்து புகைப்பிடித்து கொண்டிருந்தார். க பயணிகள் அவரிடம் சொல்லியும் அவர் கேட்கவில்லை. இதையடுத்து, பெண் விமான பணிகள், தலைமை விமானியிடம் புகார் தெரிவித்தனர்.

அவர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் வந்து புகை பிடித்து கொண்டிருந்த பயணி ஆறுமுகத்தை வலுக்கட்டாயமாக விமானத்தில் இருந்து கீழே இறக்கினர். அவர் கொண்டு வந்திருந்த உடைமைகளும் கீழே கிறக்கப்பட்டன. இதையடுத்து, ஒரு மணி நேரம் தாமதமாக 173 பயணிகளுடன் விமானம் சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்டு சென்றது.

விமானத்துக்குள் புகைப் பிடித்த பயணி ஆறுமுகத்திடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் பின்னர், விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். தடையை மீறி புகை பிடித்தது. விமான பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x