பாலியல் புகாரில் கைதான கோயில் பூசாரி ஜாமீன் மனு: போலீஸ் பதில் தர உத்தரவு


சென்னை: பாலியல் புகாரில் கைதான காளிகாம்பாள் கோயில் பூசாரியின் ஜாமீன் மனு குறித்து போலீஸ் தரப்பில் பதில் அளிக்க மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சாலிகிராமத்தை சேர்ந்தஇளம்பெண் ஒருவர் போலீஸில் புகார்கொடுத்திருந்தார். அதன்பேரில், விருகம்பாக்கம் மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக் முனுசாமியை கைது செய்தனர்.

இந்த நிலையில், தனக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதால் ஜாமீன் அளிக்குமாறு கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்திருந்தார்.

சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,இந்த மனுவுக்கு போலீஸ் தரப்பில் பதில் அளிக்கஉத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு (நாளை) தள்ளிவைத்துள்ளார்.